Search

பிரான்ஸ் மண்ணிலிருந்து வல்வையரின் புதிய இணையம்.

பிரான்ஸ் மண்ணிலிருந்து வல்வை மக்களுக்கான புதிய இணையமான www.vvtfrance.com இன்று முதல் வெளிவருகின்றது.இணையத்தின் சாராம்சம் கீழே.

எங்களுக்கு என்று அடையாளமும் தனித்துவமும் தந்த தேசியமும்,ஊரும் எமது இரு கண்கள்.
அதிலும் தேசியம் என்று ஒன்று சிதைவடையாமல் இருந்தால்தான் ஊர் என்ற
அமைப்புகள் இருக்கமுடியும் என்பதை நாம் முழுமையாகவே நம்புகின்றோம்.
அதனாலேயே எமது இணையமும் தேசியவிடுதலையை முன்னெடுக்கும்
செயற்பாடுகளுக்கும் செய்திகளுக்கும் முன்னிடம் கொடுப்பதே எமது கடமை என்று
உணர்கின்றோம்.அதனை போலவே எமது ஊர் சார்ந்த செய்திகளுக்கும்,ஊர் சார்ந்த
முன்னேற்ற செயற்பாடுகளுக்கும் என்றுமே எமது இணையம் உறுதுணையாக இருக்கும்.
எமது ஊரை வந்துதொட்டு செல்லும் அந்த கடலையில் எழுதப்பட்டிருக்கும் எமது
தேசத்தின் வரலாற்றை நாம் என்றுமே வெளிப்படுத்திக்கொண்டே இருப்போம்.
எங்கள் ஊரின் ஒவ்வாரு மண்துகளிலும் நிறைந்திருக்கும் தமிழீழதேசியவிடுதலையின்
செய்தியை எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பதே எமது வரலாற்றுபணி என்று
நினைக்கின்றோம்.அதனையே செய்வோம்.
ஆனாலும் நாங்கள் வாழுகின்ற புலம்பெயர் தேசங்களின் சட்டதிட்டங்களுக்கு
அமையவே எமது கருத்து வெளிப்பாடுகளும் இருக்கும் என்பதை உறுதியும்
செய்கின்றோம்.
எமது இணையம் சம்பந்தமான எந்தவொரு கருத்துகளையும் விமர்சனங்களையும் உள்வாங்கவும்
எம்மை திருத்தி நடைபோடவும் நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம் என்பதையும்
இங்கு பதிவு செய்வதில் பெருமை கொள்கின்றோம்.
நன்றி
வல்வை இணையம் பிரான்ஸ் [vvtfrance.com]
E-Mail : vvtfrance@live.com
info@vvtfrance.com
 Skype : vvtfrance.com



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *