வல்வை புளுஸ் அணிகள் முதலிடம் பெற்றன.(Champions)
இன்று(22-07-2012) லண்டனில் மகாஜனா பழைய மாணவர்களால் நாடாத்தப்பட்ட வெள்ளி விழா உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் வல்வை புளுசின் அணிகள் அனைத்துப் பிரிவுகளிலும் பங்கேற்றன.
10 வயதிற்கு உற்பட்டோர் அணி இறுதி வரை சிறப்பாக விளையாடி, இறுதி ஆட்டத்தில் மயிலிட்டி விளையாட்டு கழகத்தை 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டி முதலிடத்தை பெற்றுக்கொண்டனர்.
12 வயதிற்கு உற்பட்டோர் அணி இன்று மிகுந்த உற்சாகத்துடன் போட்டிகளில் விளையாடினர். இறுதி ஆட்டத்தில் KITC விளையாட்டு கழகத்தை 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டி முதலிடத்தை பெற்றுக்கொண்டனர்.
12 வயதிற்குட்படடோர் தொடர்ந்து பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும். இரண்டு வாரங்களுக்கு முன்னர் வல்வை நலன்புரிச் சங்கத்தின் கோடைவிழா 2012 இல். இறுதி ஆட்டத்தில் யூனியன் விளையாட்டு கழகத்தை வென்று முதலிடத்தை பெற்றுக்கொண்டனர்.
19 வயதிற்கு உற்பட்டோர் அணி இறுதி வரை சிறப்பாக விளையாடினர், இறுதி ஆட்டம் சமநிலையில் முடிவடைந்ததால், தொடர்ந்த பனால்டி உதையில் தோல்வி அடைந்து இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டனர். இவர்களுடைய ஆட்டம் இன்று பார்வையாளர்கiளை கவரும்படி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அனைவருக்கும் VVTUK.COM வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது
10 வயதிற்கு உற்பட்டோர் அணி
12 வயதிற்கு உற்பட்டோர் அணி
19 வயதிற்கு உற்பட்டோர் அணி