பிரான்சில் எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமை, வல்வை நலன்புரிச்சங்கம் வாழ்த்த உயிர்வரை இனித்தாய்

பிரான்சில் எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமை, வல்வை நலன்புரிச்சங்கம் வாழ்த்த உயிர்வரை இனித்தாய்

உயிர்வரை இனித்தாய் திரைப்படம் கடந்த ஞாயிறு 27.07.2014 அன்று பிரான்சின் தலைநகர் சோம்வெலிசேயில் உள்ள புப்புளிஸ் சினிமாவில் நேற்று சிறப்புக் காட்சியாகக் காண்பிக்கப்பட்டது.

இதுவரை இல்லாதளவுக்கு பெருந்தொகையான மக்கள் நிறைவுடன் இத்திரைப்படம் காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு யாழ். மகாணசபை உறுப்பினர் திரு. எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார், சிறப்பு விருந்தினராக பாரீஸ் மாநகரசபையின் கிளை நகரத்தின் உதவி மேயர் சேர்ஜியா மகேந்திரன் பங்கேற்க, பிரபல திரைப்படக்கலைஞர் நிர்மலா புகழ் ஏ. ரகுநாதன் உட்பட பல்வேறு கலைஞர்கள் ஒன்றுகூட இரு பெரும் நிகழ்வுகளாக நடைபெற்றது.

முதலாவதாக மதியம் திரு.எம்.கே சிவாஜிலிங்கம் தலைமை தாங்க பாரீஸ் கலைஞர்கள், தடம் நிறுவன ஏற்பாட்டில் சிறப்பு விருந்துபசாரம் இடம் பெற்றது.

திரைப்படத்தின் பாடகிகளில் ஒருவரான அர்ச்சனா செல்லத்துரை, திரைப்படத்தின் நாயிக நர்வினி உட்பட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் வல்வை நலன்புரிச்சங்கம் பிரான்சில் இருந்து நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றார்கள், அத்தருணம் திரைப்பட இயக்குனர் செல்லத்துரைக்கு வாழ்த்து மடல் வல்வை நலன்புரிச்சங்கச் சார்பில் வழங்கப்பட்டது, வல்வை நலன்புரிச்சங்கத் தலைவர் இதுகுறித்து உரையாற்றினார்.

அதேபோல வல்வை ஜேதாஜி கழகம், காட்டுவளவு மக்கள் சார்பிலும் அ.ஜீவகனால் ஒரு வாழ்த்துமடல் வழங்கப்பட்டது.

அரங்கில் பல்வேறு திரைக்கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டார்கள், பின் அங்கிருந்து திரையரங்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

பாரீசில் திரையரங்கு இருந்த சோம்செலிசேயில்தான் அன்றய தினம் மாலை ரூவர் டி பிரான்ஸ் சைக்கிளோட்டம் முடிடையும் தருணமாகும், பெருந்தொகையான பிரான்சிய மக்களுடன் கூடியிருந்தனர், அந்த சைக்கிளோட்ட நிகழ்ச்சி முடிவடைய திரைப்படம் ஆரம்பித்தது.

விமானங்கள் பறந்து வேடிக்கை காட்ட, வாத்திய இசை முழங்க பல்லாயிரக்கணக்கான மக்கள் குழுமியிருக்க, உலகமே அவதானித்துக் கொண்டிருக்கும் ஓரிடத்தில் அமைந்துள்ள புப்பிளிஸ் திரையரங்கு நிறைந்துவிடும் அபாயம் இருந்தால் உடனடியாக பாரிய திரையரங்கு மாற்றப்பட்டது.

மிகச்சிறந்த திரைப்படமென வாழ்த்திய திரு. எம்.கே. சிவாஜிலிங்கம் இத்திரைப்படத்தால் உழைக்கும் பணத்தில் ஒரு பங்கு தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடைய கல்விக்கும் உதவ வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

விருந்துபசாரம் பாரீஸ் நகரில் உள்ள பாரத் விழா மண்டபத்தில் நடந்தபோது பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் :

Leave a Reply

Your email address will not be published.