மரண அறிவித்தல் சுப்பிரமணியம் சச்சிதானந்தம்
தோற்றம் 05.04.1939 மறைவு 18.08.2012
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்டவரும் டென்மார்க் கேர்னிங் நகரில் வாழ்ந்துவந்தவருமான திரு. சுப்பிரமணியம் சச்சிதானந்தம் இன்று 18.08.2012 சனிக்கிழமையன்று மரணமடைந்தார்.
அன்னார் காலம் சென்ற வல்வை குச்சத்தை சேர்ந்த சச்சிதானந்தம் – பத்மாவதி தம்பதியரின் புதல்வரும், வல்வை வேலும்மயிலு – கண்ணகையம்மா தம்பதியரின் புதல்வி சுந்தரவதியின் அன்புக் கணவருமாவார்.
திரு. சச்சிதானந்தம் ( கண்ணன் – சச்சி ) சுப்பிரமணியம், திருமதி பத்மாவதி சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புத் தந்தையும், ஷகிலா சச்சிதானந்தத்தின் மாமானாரும், மீனாவதி ( காலஞ்சென்றவர் ) மற்றும் தற்போது தாயகத்தில் வாழும் சுந்தரேஸ், கமலரங்கன், இந்தியாவில் வாழும் சுசீலாவதி, விமலாவதி, மற்றும் சுகுணாவதி ( இங்கிலாந்து ) ஆகியோரின் அருமைச் சகோதரரும் – ரமிலா, ரன்யா, ஷாருக்கா, நிதேஸ் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
தொடர்பு தொலைபேசி : சச்சி ( டென்மார்க் ) 0045 40 50 22 80