சிவாச்சார்ய அபிசேகம்
யாழ்பாண நகரில் பல காலம் முதுபெரும் சிவாச்சாரியார்கள் வாழ்ந்து உலகில் பல பாக்;ங்களிலும் தமது சிறப்பான பணிகளை மக்கள் போற்றும் வகையில் செய்திருப்பதை நாம் நன்கு அறிவோம். நாட்டின் சூழ் நிலை காரணமாக பல இளம் சிவாச்சார்கள் புலம் பெயர் நாடுகளிலும் சென்று தமது கடமைகளை சிறப்பாக செய்துவருகின்றார்கள. நாம் தற்போது கணணி யுகத்தில் வாழ்வதால் பல வினாக்களுக்கு மக்களுக்கு விடை கொடக்க வேண்டிய சிவாச்சாரியபாரம்பரியம் உருவாக்கப்படல் வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். இவற்றை எல்லாம் நன்கு அறிந்த வல்வை வைத்தீஸ்வரன் ஆலய பிரதம குரு தமத நான்கு மக்களையும் வேத ஆகம கல்விகளில் சிறப்புடையவராக உருவாக்கிக்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் இரண்டு மக்களுக்கு குருப்பட்டாபிசேகம் செய்வித்து சிவாச்சரிய பணிகளை செய்து மரபுகளை பேணிவருவதை நாம் பாரட்டாமல் இருக்க முடியாது தற்போது 15.09.2014 திங்கட்கிழமை காலை 6மணிக்கும் 7மணிக்கும் இடையில் சிம்மலக்கன சுப வேளையில் தமது சீமந்த புதல்வன் பிரதாம சார்மாவுக்கும் சிவாச்சாரிய அபிசேகம் நடைபெறுவதை அறிந்து வல்வை மக்களாகிய நாம் அளப்பரிய மகிழ்ச்சியடைகிறோம்.
வல்வை வாழ் சைவ பெருமக்கள்