வல்வெட்டித்துறை கணபதி படிப்பகத்தின் 47 வது ஆண்டுவிழாவும், பாலர்தின விழாவும்

வல்வெட்டித்துறை கணபதி படிப்பகத்தின் 47 வது ஆண்டுவிழாவும், பாலர்தின விழாவும்
வல்வெட்டித்துறை கணபதி படிப்பகத்தின் 47 வது ஆண்டுவிழாவும், பாலர்தின விழாவும் எதிர்வரும் 19.10.2014 (ஞாயிற்றுக்கிழமை) நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வடக்கு வீதியில் மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.ச.ஜெயகணேஸ் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக இலங்கை வங்கி வடமாகாணக் காரியாலயத்தின் உதவி முகாமையாளர் திரு.ஞானசுந்தரம் பரதன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
கணபதி பாலர் பாடசாலை பாலர்களின் கலை நிகழ்வுகளைத் தொடர்ந்து நெடியகாடு இளைஞர் காலாமன்றத்தினரின் 18 வது தயாரிப்பான “வெள்ளை மலர்கள்” தொலைக்காட்சி நாடகம் (கற்பனைச்சித்திரம்) திரையிடப்படும்.
நிர்வாகத்தினரின் அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.