அமரர் பாலன் வேலுப்பிள்ளை நிதியமூடான 2014ல் புலமைபரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 18.10.2014 சனிக்கழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வானது சம்பிர்தாய பூர்வமாக வல்வெட்டித்துறை கம்பர்மலை ஸ்ரீ ஞான வைரவர் ஆலயத்தில் இருந்து மாணவர்களும் பிரதம விருந்தினர்கள் சிறப்பு விருந்தினர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மங்கள வாத்தியத்துடன் வேலுப்பிள்ளை நினைவாலய வளாகத்தில் அமைந்துள்ள மேடைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது இதில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட்ட விரிவுரையாளர் கலாநிதி தம்பி தம்பி ஜயா கலாமணி அவர்களும் திருமதி கலாமணி அவர்களும் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக சிவஸ்ரீ தண்டபாணிக தேசிகர் வல்வை முத்துமாரியம்மன் தேவஸ்தான பிரதான குருக்கள் அவர்களும் ஒய்வுபெற்ற கோட்டகல்வி அதிகாரியும் வடமராட்சி இணக்க மன்ற தவிசாளருமான திரு.சி.நற்குணலிங்கம் அவர்களும் மற்றும் அதிபர்களும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இந்நிகழ்வில் வடமராட்சி உடுப்பிட்டி தொண்டைமனாறு வல்வெட்டித்துறை பிரதேசத்தை அண்டிய 11 பாடசாலையைச் சேர்ந்த 50 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர் யா உடுப்பிட்டி அ மி கல்லூரி யா கரணவாய் தாமோதரா வித்தியாலயம் யா வல்வை சிவகுரு வித்தியாசாலை யா வல்வை அ மி த கலவன் பாடசாலை யா உடுப்பிட்டி மகளீர் கல்லூரி யா வல்வை மகளீh மகா வித்தியாலயம் யா வல்வெட்டி விநாயகர் வித்தியாலயம் யா கொற்றாவத்தை அ மி த பாடசாலை யா பொலிகண்டி அ மி த பாடசாலை யா வல்வெட்டி இ த க பாடசாலை யா கம்பர்மலை வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர் அத்துடன் இவ்விழாவிற்கு அனுசரணை வழங்கியவர்கள். திரு.கி.இரத்தினேஸ்வரலிங்கம் (சுவிஸ்) திரு.கி. யோகேந்திரராசா (ஜேர்மன்) திரு.க.சசிகுமார் (லண்டன்) திரு.முரளி பிறேமிளா (கனடா) திரு.கி.சிறிதரன் (சுவிஸ்) திரு.மு.கேசவன் (கனடா) திரு.மு.குமரதாஸ்(லண்டன்) திரு.த.கோகுலன் (ஜேர்மனி) திரு.மதனசுந்தரம் சிறிதரன் (லண்டன் வல்வை மதவடி) தி.த.பிரபாகரன் (ஜேர்மனி) அணைவருக்கும் எமது வேலுப்பிள்ளை நினைவாலயம் மற்றும் வேலுப்பிள்ளை நிதியம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.