கனடா வாழ் வல்வை மக்களின் ஆதரவு உயிர்வரை இனிக்கிறது..
வல்வை நலன்புரிச் சங்கம் கனடா ரொரன்ரோவின் ஆதரவில் உயிர்வரை இனித்தாய் திரைப்படம் யோர்க் சினிமாவில் கடந்த சனிக்கிழமை 18.10.2014 அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்புக் காட்சியாக காண்பிக்கப்பட்டது.
டென்மார்க்கில் இருந்து திரைப்பட நாயகன் வஸந்த், நாயகி நர்வினி, இயக்குநர் கே.எஸ்.துரை, தயாரிப்பு ஆதரவு வழங்கிய ரியூப்தமிழ் உரிமையாளர் ரவி சுகதேவன், விற்பனை முகாமையாளர் டீ.கே ரவல்ஸ் அதிபர் வல்வை சச்சி சுப்பிரமணியம், புகைப்படப்பிடிப்பாளர் மிதிலா செல்லத்துரை ஆகியோர் கனடா சென்றிருந்தார்கள்.
இவர்களுக்கு தங்கியிருந்த கோட்டலில் இருந்து திரையரங்குவரை லிமோஸ் வாகன அழைப்பு, செங்கம்பள வரவேற்பு போன்றவற்றை வல்வை நலன்புரிச் சங்கம் ரொரன்ரோ வழங்கியது.
வல்வை உட்பட தொண்டைமானாறு, மயிலிட்டி, பருத்தித்துறை வாழ் மக்களும் சிறப்பாக வருகை தந்திருந்தனர்.
இத்தருணம் திரு. எஸ்.ஜெயபாலசிங்கத்திற்கு வல்வையின் திரைப்பட முன்னோடி என்ற விருது வழங்கி கௌரவித்தனர் திரைப்படக் குழுவினர்.
திரைப்படக் குழுவினருக்கு சிறப்புக் கேடயத்தை ஏ கண் ஏ றிங் திரைப்பட தயாரிப்பாளர் திரு. முரளி முகுந்தன் வழங்கினார்.
திரைப்படத்தை தொடர்ந்து கனடாவில் தினசரி காட்சியாக காண்பிக்கும் பணிகளில் அடுத்த கட்டமாக கனடாவாழ் தமிழ் திரைப்படக் கலைஞர்கள் களமிறங்கியுள்ளார்கள்.
யோர்க் சினிமா உரிமையாளர்களில் ஒருவரான வல்வை பிரசன்னா கலிங்கராஜன் சிறப்பு ஏற்பாடுகளை செய்து உதவினார், அவருடைய பெற்றோர் கலிங்கராஜன் தம்பதியர்க்கு திரைப்பட நாயகன் வஸந்த் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
திரைப்படங்களை வர்த்தக ரீதியில் தயாரிக்கும் முயற்சியில் இது முக்கிய வெற்றி என்று பிரபல கலைஞரும் கனடா ரி.வி.ஐ தொலைக்காட்சி இயக்குநருமான திரு. விக்கினேஸ்வரன் மகிழ்வு வெளியிட்டார்.
வல்வை நலன்புரிச் சங்க நிர்வாகிகள் அனைவரும் இரவு பகலாக பாடுபட்டு வெற்றிகரமாக காரியங்களை நிறைவேற்றியுள்ளார்கள் என்று திரைப்பட இயக்குநர் பாராட்டியதோடு கனடா வாழ் வல்வைப் பெருமக்களின் பேராதரவிற்கும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
கனடாவில் தங்கி நின்ற பத்துத் தினங்களிலும் வல்வை மக்கள் வழங்கிய விருந்துபசாரத்தில் தாம் திக்கு முக்காடிவிட்டதாக கலைஞர்கள் தெரிவித்தார்கள்.
தினசரி விருந்துபசாரம் களைகட்டியது, திரு. நித்தியானந்த வடிவேல் அமுதலட்சுமி தம்பதியர் கேரள உணவகத்தில் மிகப்பெரும் விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்தனர், எஸ்.ஜெயாலசிங்கம், குரு.யோகராஜ் இருவரும் திரைப்படக் கலைஞர்களுக்கு சிறப்பு விருந்தை வழங்கினார்கள்.
தொண்டைமானாறு விவேகி விக்கினேஸ்வரன் தனது செலவிலேயே அனைத்துக் காரியங்களையும் முன்னெடுத்தார்..
கலிங்கராஜன் முழு நாளும் கலை முதல் இரவுவரை பாடுபட்டு நுழைவுச் சீட்டுக்களை விற்பனை செய்தார், விஸ்ணு செல்வம் அனைத்து உதவிகளையும் வழங்கி கேடயங்களை வாங்கி உதவினார்.
மருத்து நீர் புகழ் திரு. ராஜ்குமார் போக்குவரத்து ஏற்பாடுகளை வழங்கியதோடு விமான நிலையத்தில் வைத்து வழிப்பயணத்திற்கு வல்வைப் புகழ் கொழுக்கட்டை வழங்கி ஆனந்தத்தைத் தெரிவித்தார்.
ஒரு திரைப்படத்தால் உலக முற்றும் பரவியுள்ள வல்வை உறவுகளின் அன்பை பகிர்ந்து கொள்ள புதுவழி பிறக்கிறதே என்ற மகிழ்வை ஆசிரியர் கி.செல்லத்துரை வெளியிட்டார்..
கனடா வாழ் வல்வை மக்களின் அன்பு உயிர்வரை இனிக்கிறது என்று விமான நிலையத்தில் திரைப்படக் கலைஞர்கள் கூறியபடியே கண்களில் நீர் கசிய விடைபெற்றார்கள்.
இத்துடன் புகைப்பட ஆல்பமும் இணைக்கப்படுகிறது…