இன்று வல்வையில் சிதம்பரா பழைய மாணவர்களின் அனுசரனையுடன் நடாத்தப்பட்ட சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரின் (Chithambara Well wishers Network – CWN) கணிதப்போட்டி 2014க்கான பரிசளிப்பு விழா, வல்வை சனசமூகசேவ நிலைய மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வு பிற்பகல் சுமார் 4 மணியளவில் ஆரம்பித்திருந்தது. நிகழ்விற்கு வடமராட்சி வலய கல்விப் பணிப்பாளர் திரு.சி.நந்தகுமார் பிரதமவிருந்தினராக வருகைதந்து சிறப்பித்திருந்தார். மற்றும் வல்வை முத்துமாரியம்மன் பிரதம குருக்கள் தண்டாயுதபாணிகதேசிகர், வல்வை சிவன் கோவில் பிரதம குருக்கள் மனோகர குறுகல், வடமாகணசபை உறுப்பினர் திரு.M.K.சிவாஜிலிங்கம், வல்வை நகரசபைத் தலைவர் திரு.ந.அனந்தராஜ், வல்வை நகரசபைத் உப தலைவர் திரு.க.சதீஸ், வல்வை சிதம்பராக் கல்லுரி திரு.கி.இராஜதுரை, வல்வை சிவகுரு வித்யாசாலை ஆசிரியை திருமதி.புஸ்பகலா, வல்வை ஊறணி வைத்தியசாலை மாவட்ட வைத்திய அதிகாரி திருமதி.கலைச்செல்வி ஆகியோரும் கலந்து இவ் விழாவை சிறப்பித்தனர். இலண்டனை தளமாக கொண்டு இயங்கும் சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினர் கணிதப்போட்டி பரீட்சையை கடந்த 14.06.2014 அன்று சிதம்பராக் கல்லூரி மற்றும் சிவகுரு வித்தியாசாலையில் நடாத்தியிருந்தது.