Netgear எனும் நிறுவனம் வயர்லெஸ் முறையில் இயங்கக்கூடியதும் வீட்டினை கண்காணிக்கக்கூடியதுமான புதிய ஸ்மார்ட் கமெராவினை அறிமுகம் செய்துள்ளது.
Netgear Arlo எனும் இக்கமெராவானது HD தொழில்நுட்பத்தில் வீடியோ பதிவு செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளதுடன் ஒரே நேரத்தில் 130 டிகிரி கோணத்தில் படம் பிடிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
மேலும் இரவு நேரங்களிலும் துல்லியமாக படம் பிடிக்கக்கூடிய வகையிலும், நீர் உட்புகாத வகையில் இக்கமெரா உருவாக்கப்பட்டுள்ளது.
இதனுடன் iOS மற்றும் Android சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன் இலவசமாகவும் கிடைக்கின்றது.