பாழடைந்த வீட்டில் அழுகை சத்தம்! துணிச்சலுடன் “பேயை” படம்பிடித்த பெண் (வீடியோ இணைப்பு)

பிரித்தானியாவில் வீடு ஒன்றில் உலாவும் பேயை பெண் ஒருவர் புகைப்படம் எடுத்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 1924ம் ஆண்டு தேம்ஸ் (Thames) பகுதியில் கட்டப்பட்ட வீடு ஒன்றில் அமானுஷ்ய நிகழ்வுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள ஆக்ஸ்போர்டுசையர் (Oxfordshire) நகரை சேர்ந்த மைக்கில் மோரிஸ் (Michelle Morris Age-42) என்ற அமானுஷ்ய ஆய்வாளர் அவ்வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த வீட்டில் விளக்கமுடியாத செயல்கள் மற்றும் அழுகை சத்தங்கள் அதிகளவில் கேட்டுள்ளது. எனவே வீட்டின் வெளியில் இருந்தபடியே அவர் எடுத்த புகைப்படத்தில், ஜன்னலின் ஓரம் பேய் நின்றிருப்பது புலப்பட்டுள்ளது.

இதுகுறித்து மைக்கில் மோரிஸ் கூறுகையில், அந்த வீட்டில் வாழ்ந்த பாட்டி ஒருவர் குழந்தை ஒன்றை வளர்த்துள்ளார் என்றும் அந்த குழந்தை மரத்திலிருந்து தவறி கீழே விழுந்து இறந்ததால், அந்த பாட்டியும் தனது இறப்பிற்கு பிறகு அங்கேயே உலாவுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்போது கிடைத்திருக்கும் புகைப்படம் தனது ஆய்விற்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published.