பிரசவத்தின் போது இறந்துவிட்டதாக கருதப்பட்ட பெண் ஒருவருக்கு, 45 நிமிடங்களுக்கு பிறகு நாடித்துடிப்பு வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள போகா ரேடன் பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ரூபி கிராயுபெரா காசிமிரோ(வயது 40).
பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரூபிக்கு, சிசேரியன் மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது.
அப்போது எதிர்பாராத விதமாக பனிக்குடம் உடைந்ததால், அதிலிருந்த நீர் ரூபியின் ரத்தத்தில் கலந்துவிட்டது, எனவே உடல்நிலை மிகவும் மோசமாகி போனது.
நாடித்துடிப்பும் குறையத் தொடங்கியதால் ரூபி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்து விட்டனர், இதற்கிடையே பெண் குழந்தையை மருத்துவர்கள் பத்திரமாக வெளியே எடுத்தனர்.
இந்நிலையில் சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு, ரூபியின் உடலில் சிறு அசைவுகள் தென்படவே, மீண்டும் சிகிச்சை அளித்து உயிர் பிழைக்க வைத்துள்ளனர்.