மிகவும் ஆபத்தான செயல் “ரியல் ஹீரோ” இறந்தது போல் நடித்து சிறுமியின் உயிரை காப்பாற்றிய சிறுவன் (வீடியோ இணைப்பு)
சிரியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் துப்பாக்கிச் சூட்டின் இடையே ஓடிச் சென்று சிறுமி ஒருவரை மீட்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
சிரியாவைச் சேர்ந்த பிரபல செய்தி நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், சிறுவன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நடக்கும் இடத்தின் மத்தியில் குண்டு மழைகளுக்குள் தைரியமாக புகுந்து ஓடுகிறான்.
அப்போது திடீரென ஒரு குண்டு அவனது தோள்பட்டையில் பாய்கிறது. இதனால் கீழே விழும் அந்த சிறுவன் இறந்துவிட்டான் என்று அனைவரும் நினைக்கும் வேளையில் சில நிமிடங்களில் அவன் மீண்டும் எழுந்து துப்பாக்கிச்சூட்டுற்கு இடையே ஓடத் தொடங்குகிறான்.
பின்னர் அருகே ஒரு வாகனத்தின் பின்னே ஒளிந்துகொண்டிருக்கும் ஒரு சிறுமியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டே அருகில் உள்ள கட்டிடம் ஒன்றை நோக்கி ஓடுகிறான்.
இந்நிலையில் இது எங்கு எடுக்கப்பட்டது, இந்த இரண்டு சிறுவர்கள் யார் அவர்கள் உயிர் பிழைத்தார்களா என்பது பற்றியும் எந்த தகவலும் தெரியவில்லை.
மேலும், இந்த வீடியோவை பார்த்த சிலர், தன் மேல் மேலும் குண்டுகள் பாயக்கூடாது என்பதற்காக தான் அந்த சிறுவன் காயமடைந்ததும் இறந்தது போல் நடித்துள்ளான் என கருத்து தெரிவித்துள்ளனர்.