திக்கம் இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்திவரும் யாழ் மாவட்ட ரீதியாக அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான 11நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் 3ம் இடத்துக்கான தெரிவுப்போட்டி நேற்று (13/11/2014) மாலை 04:30 மணியளவில் திக்கம் மைதானத்தில் மிக விறுவிறுப்பாக நடைபெற்றது.
இவ் ஆட்டத்தில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் எதிர்த்து மோதிய அல்வாய் மனோகரா விளையாட்டுக்கழகத்தை 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டு3ம் இடத்தை தட்டிச்சென்றது .