இந்தோனேசியாவில் இன்று அதிகாலை மௌலான கடலின் கிழக்கு திசையில், கடலுக்கடியில் 300 கிலோமீற்றர் தூரத்தில் 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆசிய பசுபிக் சுனாமி எச்சரிக்கை மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
நிலஅதிர்வு ஏற்பட்ட பகுதியை சூழ 300 கிலோமீற்றர் தூரத்திற்கு அபாயகரமான அலைகள் ஏற்படக் கூடிய சாத்தியம் உள்ளதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது.
இந்தோனோஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலஅதிர்வை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதனை அண்டிய நாடுகளான இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் மற்றும் தென் பசுபிக் தீவுக் கூட்டங்களில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
எனினும் நிலஅதிர்வினால் உடனடியாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் இழப்புக்கள் குறித்து எந்தவித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.