பாலைவனம் என்றாலே கண்ணுக்கு எட்டிய தூரம் எங்கும் வறண்ட நிலமும், மணலும், ஒரு சில அரிய மரங்களை மட்டும் தானே பார்த்திருப்போம்.
ஆனால், சிலி நாட்டில் உள்ள அடாகாமா என்ற பாலைவனத்தில் வருடத்தில் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் மட்டும் 200க்கும் மேற்பட்ட வகையான வண்ண மலர்கள் அதிகளவில் பூத்து குலுங்குகின்றன.
வறண்ட நிலமான பாலைவனத்தில் காணும் திசையெங்கும் அழகழகான பூக்கள் பூத்துக் குலுங்குவதற்கு இயற்கையின் ரகசியம் மட்டுமே முக்கிய காரணம் ஆகும்.