மைலோ கிண்ணத்துக்கான வடமராட்சிக்கு உட்பட்ட கழகங்களிற்கிடையிலான போட்டிகள் நேற்று 18.11.2014 காலை இமையாணன் மத்தி விளையாட்டுக் கழக மைதானத்தில் நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை விளையாட்டுக் கழகம் மோதியது. இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறாததால் தண்ட உதையில் நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றது.
நெடியகாடு விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கரவெட்டி கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் மோதியது. இதல் கரவெட்டி கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இவ் உதைபந்தாட்டப்போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம், நெடியகாடு விளையாட்டுக் கழகம், கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம் ஆகிய மூன்றும் வெற்றிபெறத் தவறியதால் மைலோ கிண்ணத்துக்கான சுற்றுத் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.