வல்வெட்டிதுறையில் முதன் முறையாக கலாபூசணவிருது பெற்ற திரு வெள்ளியம்பலம் முத்துச்சாமி அவர்கள் …..

வல்வெட்டிதுறையில் முதன் முறையாக கலாபூசணவிருது பெற்ற திரு வெள்ளியம்பலம் முத்துச்சாமி அவர்கள் …..

வல்வெட்டிதுறையில் முதன் முறையாக கலாபூசணவிருது பெற்ற திரு வெள்ளியம்பலம் முத்துச்சாமி அவர்கள்
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக்
கொண்ட இவர் ஓர் சிறந்த நாடகக்கலைஞர் ஆவார். இளம் வயதுமுதல் இத்துறையில் ஆர்வம் கொண்டிருந்தார். கலைக்குரு மர்ஷிலின் பிள்ளை செல்வராஜா அவரிடம் நாடகக்கலையை கற்றார். 1964 இல் வல்வெட்டித்துறை ஹெலியன்ஸ் நண்பர்கள் என்ற மன்றத்தை ஆரம்பித்தனர்.
1966 இல் புதிய பாதை என்ற நாடகத்தை அரங்கேற்றியதன் மூலம் இத்துறையில் தடம் பதித்தார். இவர் நாடகத்துறை மட்டுமின்றி சிறுகதைகள் படைபதிலும், ஓவியம் வரைவதிலும் வல்லுனராக திகழ்ந்தார். இவரது ஆக்கங்களும், நேர்காணல்களும், பத்திரிககளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
நாடகத்துறை பங்களிப்பு
நாடகங்களை எழுதி இயக்கி, ஒப்பனை செய்து, நடிப்பதிலும் திறமையானவர். இவரின் நாடக மன்றமான ஹெலியன்ஸ் நண்பர்கள் செய்த கலைச்சேவையை பாராட்டி கலைக்காவிய நாயகர்கள், நவீன நாடக கலா சிப்பிகள் ஆகிய விருதுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாடகத்துறை மட்டுமல்லாது சினிமாத்துறையிலும் இவர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நெச்சுக்குத்தெரியும்,தெய்வம் தந்த வீடு ஆகியன இவர் நடித்த இலங்கை திரைபடங்களாகும்.
பெற்றுள்ள விருதுகள்
நாற்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களில் இவர் நடித்துள்ளார். சிறப்பாக நடித்தமைக்காக Denmark நாட்டின் “அலைகள்” பத்திரிகை மூலம் நாடகச்சிகரம்,”வீரகேசரி” பத்தரிகையில் சரித்திர நாயகன், வல்வை கலை கலாச்சார மன்றத்தால் கலைச்சிகரம் எனும் பட்டமும், கவிஞன் சுமன் அவர்களால் நாடகப்புயல் எனும் பட்டமும், வடமாகாண பிரதேச செயலகத்தால் சாகித்திய விழாவில் சிறந்த கலைஞன் என்ற விருதுகளையும் பெற்றுள்ளார். போட்டி நாடக மேடையில் சிறந்த நடிகருக்குமான பல விருதுகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
15.12.2013 அன்று கொழும்பில் கலாச்சார மற்றும் அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட அரச கலாபூசண அரச விருது விழாவின், இலங்கை கலைத்துறையின் வளர்ச்சிக்காக ஈடுபட்ட சேவைக்கு புகழ் அளிக்கும் வண்ணம் திரு வெள்ளியம்பலம் முத்துச்சாமி அவர்களுக்கு கலாபூசண விருது வழங்கி கௌரவிக்கபட்டது
இப்பெருமை மிக்க கலைஞனை நீடூழிகாலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துவோம்!

Leave a Reply

Your email address will not be published.