பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவரின் தலையில் நாடாபுழு இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
பிரித்தானியாவின் கிழக்கு ஏஞ்சலியா (East Angelia) நகரில் வசிக்கும் நபர் (50) ஒருவர், கடந்த 4 ஆண்டுகளாக கடும் தலைவலியால் அவதிக்குள்ளாகியுள்ளார். மேலும் இவர் காதிலிருந்து துர்நூற்றமும் அடிக்கடி வசீயுள்ளது.
தன் நோய் குறித்து இவர் பல மருத்துவர்களிடம் கூறியும் எந்த ஒரு பலனும் இல்லாமல் இருந்துள்ளது.
சமீபத்தில் இவர் கேம்பிரிஜ்ஜில் (Cambridge) உள்ள ஆடன்புரூக் (Addenbrooke) மருத்துவமனையில் தன் நோய் பற்றி கூறி சிகிச்சை பெற சென்றிருந்தார்.
அப்போது இவரை பரிசோதித்த மருத்துவர்கள், இவரது மூளையில் 10 செ.மீ. நீளமுள்ள ஒட்டுண்ணி ரக நாடா புழு இருப்பதை கண்டு அதிர்ந்துள்ளனர்.
இதன்பின் அவருக்கு நேற்று முன்தினம் மூளையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் அந்த நாடா புளுவை அகற்றியுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், மாமிச உணவுகளை சாப்பிடும்போது இத்தகை ஒட்டுண்ணி வகைகளில் மனிதனின் உடலுக்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆனால் 4 வருடங்களாய் ஒருவரின் தலையில் நாடா புளு இருப்பதை இப்போது தான் முதன்முறை பார்க்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த நபரின் உடல்நலம் தேரி வருவதாக மருத்துவ வட்டாரங்கள் கூறியுள்ளன.