யாழ். வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருக்கு எதிராக கூட்டமைப்பினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் மேலதிகமாக ஒரு வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது .
சபையின் மாதாந்த கூட்டத்தின்போது கூட்டமைப்பினராலேயே தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இதன்போது தலைவர் அனந்தராஜிற்கு எதிராக 4பேரும், ஆதரவாக 3பேரும் வாக்களித்திருந்த நிலையில் ஈ.பி.டி.பியின் 2 உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் மேலதிகமான ஒரு வாக்கினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
வல்வையில் நடந்த இறைச்சிக்கடை ஊழல் மோசடியிலிருந்து நகரசபை அங்கத்தவரை மீட்க உதவியதாலும்,வல்வையின் பொது அமைப்புக்களையும்,பொது நிறுவனங்களையும்,நகரசபை அங்கத்தவர்களையும் தரக்குறைவாக பேசியதாலும்,இவ் குற்றங்களுக்காகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, குறித்த சபையின் தலைவர் பணம் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்தே குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.