பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் அனுசரணையுடன் வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தினர் கடந்த 3 நாட்களாக (20,21,22) வடமராச்சியின் பல்வேறு இடங்களிலும் சமூக விழிப்புணர்வு வீதி நாடக ஆற்றுகை ஒன்றை செய்தனர் . ம .சுலக்சனின் நெறியாள்கையில் “மண்மூடும் சுவடுகள் ” என்ற நாடகம். வல்லிபுரக்குறிச்சி ,கற்கோவளம் ,பருத்தித்துறை,அல்வாய்,திக்கம் வியாபாரி மூலை ,சக்கோட்டை ,தொண்டமனாறு ,ஆதிகோவிலடி,நெடியகாடு போன்ற பல இடங்களில் நடைபெற்றது .