எங்களின் ராஜகம்பீரம் நீங்கள்! –வல்வை மக்கள்

எங்களின் ராஜகம்பீரம் நீங்கள்! –வல்வை மக்கள்

பார்வதி பெற்றெடுத்த பகலவனே! வாழ்க!

எங்களின் அருந்தவமே வாழ்க!!

ஈழத்தின் அற்புதமே வாழ்க!!!
அறுபதைத் தொட்டு நிற்கும் எங்களின் அண்ணாவே!
வாழ்க! வாழ்க!! நீடூழி வாழ்க!!!

உலகத் தமிழினத்தின் உற்சவமூர்த்தியே!
எங்களின் வீரம் சொன்ன தவப்புலியே!!
ஈழத் தமிழனின் ராஜ கம்பீரம் நீங்கள்!!!

துவண்டு விழுந்த தமிழினத்தை
தூக்கி நிறுத்திய சோழ மன்னனே!
இருண்டு கிடந்த எங்கள் வாழ்வுக்கு
ஒளி காட்டிய புதுச் சூரியன் நீங்கள்!!

உலக இராணுவ மேதைகளின் பலகலைக் கழகமே!
அகிலமே அண்ணாந்து பார்க்கும் அறிவாளி நீங்கள்!!
உங்களின் தனித்துவம் தான் இன்று
தமிழுக்கும் தமிழனுக்கும் அடையாளம்.

சாகா வரம் பெற்ற எங்கள் சத்தியத் தேவனே!
பத்திரமாய் நாம் வாழ, தூக்கம் தொலைத்தவர் நீங்கள்

சுதந்திரமாய் நாம் வாழ, சுகங்களை உதறி நின்றவர் நீங்கள்

அத்தனையும் எங்களுக்குச் சத்தியமாய் நிச்சயம் அண்ணா..

இனி உங்கள் வரவு ஒன்று தான் இன்னும் மிச்சம் அண்ணா..

இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ வாழ்த்துகிறோம்.

வாழ்க! வாழ்க!! நீடூழி வாழ்க!!!

-வல்வை மக்கள்

Leave a Reply

Your email address will not be published.