சிறுவர்களை அடித்து பயிற்சியளிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்! (காணொளி)

சிறுவர்களை அடித்து பயிற்சியளிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்!  (காணொளி)

ஈராக்கில் சிறுவர்கள் இராணுவ பயிற்சிக்கு உட்படுத்தப்படும் புதிய வீடியோவை, ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘த பிளட் ஒப் ஜிஹாத் 2’ (The Blood of Jihad 2) என்ற தலைப்பில் வெளியான இந்த வீடியோ, ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டிலுள்ள நினெவெஹ் (Nineveh) மாகாணத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

இதில் சின்னஞ்சிறுவர்கள் வரிசையில் நின்று துப்பாக்கிச் சூட்டை நடத்துவது, சண்டைப் பயிற்சிகளில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இவர்களுக்கு பயிற்சியளிக்கும் தீவிரவாதி, சிறுவர்களை துன்புறுத்திவதும், அவர்களின் மர்ம உறுப்பில் அடிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறான்.

இந்த வீடியோவில் தோன்றும் சிறுவர்கள் 12 வயது அல்லது 13 வயதுக்கும் குறைவானவர்கள் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.