வல்வை பகுதியெங்கும். தொடரும் தாழமுக்கம் காரணமாக கடும் மழை பெய்து வருகின்றமையினால் வல்வை தீருவில் தெற்கு ஸ்ரீ முருகன் குடியேற்ற பகுதியில் ஏற்பட்ட்ட வெள்ளம் காரணமாக பொதுமக்கள் சொல்லென துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களுக்கு தற்காலிகமாக சமைத்து உண்பதற்குரிய உணவுப் பண்டங்கள் சம்பந்தப்பட்ட கிராம சேவையாளர்பிரிவினால் வழங்கப்பட்டது. 28 .11.2014 இன்று காலை உதய சூரியன் கழக உறுப்பினர் இரண்டு மூடை அரிசி வழங்கி குடும்பம் ஒன்றிற்கு 2Kg படி வழங்கப்பட்டது. மதியம் உணவுப்பொருட்கள் ஆதிசக்தி கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கத்தினால் கொடுக்கப்பட்டு சமைத்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவ் மக்களுக்கு உதவி தேவைப்படுவதாக அறிய முடிகிறது