யாழ் பல்கலையில் நடக்கும் அசிங்கம் அடாவடிகளை புடமிடும் மாணவர்களின் ஆதங்கக் காட்சிகள்!

யாழ் பல்கலையில் நடக்கும் அசிங்கம் அடாவடிகளை புடமிடும் மாணவர்களின் ஆதங்கக் காட்சிகள்!

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் உருவாக்கத்தில் ‘எங்கள் கதை’ எனும் தலைப்பில் அமைந்த நாடக ஆற்றுகை யாழ்.பல்கலை நிர்வாகத்தினால் தடை விதிதக்கப்பட்ட நிலையிலும் ஏனைய பீட மாணவர்களது ஒத்துழைப்புடன் அரங்கேற்றப்பட்டது.

குறித்த நாடக ஆற்றுகை ஏற்பாட்டுக் குழுவினால் யாழ்.பல்கலை நிர்வாகத்திடம் முன்னர் அனுமதி பெறப்பட்டு 26.06.2014 அன்று பல்கலை வளாக திறந்த வெளி அரங்கில் காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

எனினும் குறித்த நாடகத்தில் அரசியல், தனிப்பட்டவர்களை குத்திக் காட்டுவதாக அமைவதால் இதனைத் தடை செய்வதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

அன்றைய தினமே குறித்த நாடகத்தை ஆற்றுகை செய்ய வேண்டும் எனவும் இந்த நாடகத்தில் குறிப்பிடப்படவுள்ள விடயங்கள் மாணவர் நலன் சார் விடயங்கள் எனவும் கண்டிப்பாக இவ்வாறான நாடக ஆற்றுகை மூலமே எமது பிரச்சினைகள் வெளிக்காட்ட முடியும் என அங்கு குழுமியிருந்த ஏனைய மாணவர்கள் தமது ஆதரவை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.