கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழையின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வல்வெட்டித்துறை பொலிகண்டி குடியேற்றத்திட்டத்தில் உள்ள 11 குடும்பங்களுக்கு அவசிய உலர் உணவுப் பொருட்கள் இன்று வழங்கப்பட்டன.
இன்று முற்பகல் பொலிகண்டி மேற்கு (J/393) கிராமசேவையாளர் திரு.தவநேசன் முன்னிலையில் கையளிக்கப்பட்டன.
குறித்த அத்தியாவசிய பொருட்களுக்குரிய பணத்தினை அமெரிக்காவில் வசித்துவரும் வல்வெட்டித்துறைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வழங்கியிருந்தனர் ஏற்கனவே பதிக்கப்பட்ட இந்த குடும்பங்களிற்கு தற்காலிக கூடாரம், மற்றும் குடிநீர், ஒரு தொகுதி உலர் உணவுப் பொருட்கள் குறித்த கிராம சேவையாளர் பிரிவால் வழங்கப்பட்டுள்ளன.
நாளாந்த வேலை செய்து வரும் இந்த குடும்பங்களின் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன்இ தாழ்வான பிரதேசத்தில் இவர்களின் வதிவிடங்கள் இருப்பதால் மழை காலங்களில் பொதுவாக பாதிக்கப்பட்டுவருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.