பிரித்தானியாவில் 13,000 பேர் வரை அடிமை நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.
இந்த தொகை முன்னரை விடவும் நான்கு மடங்கு அதிகமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நவீன அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களில் விபச்சாரத்திற்குள் தள்ளப்பட்ட பெண்கள், வெளியில் செல்ல முடியாமல் அடைத்து வைக்கப்பட்ட வீட்டுப் பணியாளர்கள், விளைநிலங்கள், தொழிற்சாலைகள், மீன்பிடிப்படகுகள் போன்றவற்றில் வேலை செய்பவர்கள் ஆகியோரும் அடங்குவார்கள்.
2013ம் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சமூகத்தில் அடிமைத்தனம் எந்தளவிற்கு தீவிரமாக ஊடுருவியுள்ளதென கண்டறிவதற்காக பிரித்தானிய அரசாங்கம் முதன்முதலில் நடத்திய ஆய்வு இதுவாகும்.