சுவிஸ்.அருள்மிகு சூரிச்சிவன் கோவில் சைவதமிழ்ச்சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பினூடாக செல்வி தர்சா அழகரட்ணம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பொலிகண்டி மேற்கு ஜெ/393 கிராம சேவகர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுபொதிகள் வழங்கப்பட்டூள்ளன.
அன்பேசிவம் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர்.கு.குமணன் அவர்களின் ஒருங்கமைப்பில்சுமார் 21 குடும்பங்களுக்கு நேற்று 2014.12.01ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் பொலிகண்டி மேற்கு பொது நோக்கு மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து சின்னாவளை முகாமிலுள்ள மயிலிட்டி பலாலி போன்ற பகுதிகளைச்சேர்ந்த மக்கள் மற்றும் ஊறணி குடியிருப்பை சேர்ந்த மக்களும் தற்பொது பெய்துவரும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உடமை இழப்புகளுடன் சிலர் உறவினர் வீடுகளிலும் தற்காலிக கொட்டகைகளிலும் தங்கியுள்ளனர். இவர்களில் இன்னமும் தாழ்நிலப்பரப்பில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு ஆயிரம்ரூபா வீதம் சுமார் 21 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இக்குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகளை அன்பே சிவம் அமைப்பின் இணைப்பாளர் கு.குமணன்,ஊடகவியலாளர்.க.விஜியந்தன்,கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதி சாண்டோ க.கவீந்திரன்,ஆகியோர் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தித் தொகுப்பு :கா.கணேசா.விஜியந்தன்