அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோருகின்ற அகதிகளுக்கு தற்காலிக வீசாவை வழங்குவதற்கான சட்ட மூலம் அந்த நாட்டின் செனட் சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
asylumஇதன்படி அவுஸ்திரேலியா செல்லும் அகதிகள் 3 தொடக்கம் ஐந்து ஆண்டுகள் வரையில் அங்கு வசிக்கவும், பணியாற்றவும் இடமளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
முன்னர் அகதிகளுக்கு அந்த நாட்டில் தற்காலிக வீசா வழங்குவதல்லை என்று குடிவரவுத்துறை அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மீண்டும் தற்காலிக வீசாவை வழங்கும் வகையில், அவுஸ்திரேலியாவின் குடிவரவு சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்ட சட்டமூலம் நேற்று செனட்டில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது
இந்த திருத்தங்களுக்கு ஆதரவாக 34 வாக்குகளும், எதிராக 32 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன் போது சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின் அகதிகள் குறித்து கடுஞ்சொல் விவாதங்களும் இடம்பெற்றதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியா செல்லும் சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் தற்போது பப்புவா நியுகினி மற்றும் நவுரு தீவுகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு மாற்றப்படுகின்றனர்.
நிறைவேற்றப்பட்டுள்ள புதிய சட்டத்தின் படி, முகாம்களிலுள்ள நூற்றுக்கணக்கான சிறார்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அகதிகள், முகாமில் இருந்து வெளியேறி, 3 தொடக்கம் 5 வருடங்கள் அவுஸ்திரேலியாவில் வசிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இதன் கீழ் அகதிகளுக்கு தொழில் உரிமை வழங்கப்பட்டுள்ளதுடன், திறன் அல்லது ஏனைய குடிப்பெயர்வு வீசாக்களுக்கும் விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தற்காலிக வீசாவை கொண்டவர்கள் நிரந்தர வீசாவை பெற தவறும் பட்சத்தில், அவர்கள் உடனடியாக நாடுகடத்;தும் வகையில் திருத்த யோசனையில் வகை செய்யப்பட்டுள்ளது.