பூமிக்கு அடியில் புதைந்த பிரம்மாண்ட அரண்மனை: (வீடியோ இணைப்பு)

பூமிக்கடியில் புதைந்த அரண்மனை ஒன்றை பிரித்தானிய தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
பிரித்தானியாவை சேர்ந்த தொல்லியல் துறையினர், கடந்த 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப்பெரிய அரண்மனையை செலிஸ்பரி(Salisbury) பகுதியில் உள்ள அந்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க கோட்டைக்குள் கண்டுபிடித்துள்ளனர்.

சுமார் 3 மீற்றர் கனமான சுவரால் சூழப்பட்ட இந்த அரண்மனை, 170 மீற்றர் நீளமும் 65 மீற்றர் அகலமும் கொண்ட ஒரு வளாகத்தையும், 60 மீற்றர் நீளம் கொண்ட அரங்கம் மேல்தளம் மற்றும் பல்வேறு தடுப்புச்சுவர்களை கொண்டுள்ளது.

பிரதேசவியல் மற்றும் புவிஇயற்பியல் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அந்த அரண்மனையின் உட்புற மற்றும் வெளிப்புற முற்றங்களை தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி செய்துள்ளனர்.

இந்த ஆய்வில் பூமிக்கடியில் நிறைய கட்டிடங்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் அந்த நகர எல்லைக்குள் உள்ள கட்டிடங்களின் விரிவான புகைப்படமும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், கோட்டையின் புல் தளத்திற்கு கீழே காணப்பட்ட இந்த அரண்மனை 700 வருடத்துக்கும் மேலாக மண்ணில் புதைந்திருக்கலாம் என்றும் வலுவான இந்த அரண்மனையின் உள் மற்றும் வெளித்தோற்றம் ரோமானிய அரசின் உலோகக் காலத்தில் கட்டப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.