வல்வெட்டித்துறை பொலிகன்டி கடற்கரை பகுதியில் பிடிபட்ட 150KG கஞ்சா, காவல்துறை அதிரடி! (மேலதிக படங்கள் இணைப்பு)

வல்வெட்டித்துறை பொலிகன்டி கடற்கரை பகுதியில் பிடிபட்ட 150KG  கஞ்சா, காவல்துறை அதிரடி! (மேலதிக படங்கள் இணைப்பு)

வல்வெட்டித்துறை பொலிகன்டி கடற்கரை பகுதியில் படகு மூலம் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒன்றறைக் கோடி ரூபா(1.5000.000) பெருமதியான கஞ்சா இறக்கிக்கொண்டிருக்கும் போது வல்வெட்டித்துறை கவல்துறையின்ரின் அதிரடி வேட்டையில்பிடிபட்டது.
பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து திக்கம் சந்தியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஞாயிற்றுக்கிழமை (07) இரவு நடமாடிய 4 சந்தேகநபர்கள், பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் கஞ்சாவை கொள்வனவு செய்வதற்கு வந்ததாக குறிப்பிட்டு இருந்தனர் இதனையடுத்து, கஞ்சா கொண்டுவரப்படும் இடம் தொடர்பான தகவல் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, அவ்விடத்துக்கு இராணுவத்தினருடன் சென்று தயாராக நின்றிருந்த பொலிஸார், 150 கிலோ கஞ்சா பொதிகளை படகில் கொண்டுவந்த சந்தேகநபரை கைது செய்ததுடன், கஞ்சா மற்றும் படகு ஆகியவற்றையும் கைப்பற்றினர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த வேட்டை இடம் பெற்றது படகில் இருந்து கைது செய்யப்பட்ட ஐவரும் யாழ் மாதகல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published.