Search

ஸ்பெயினில் சிங்கக் குகைக்குள் விழுந்த காவலர் : கவலைக்கிடமான நிலையில் (காணொளி)

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் சிங்கக் குகைக்குள் கால் தவறி விழுந்த காவலரை, அங்கிருந்த சிங்கங்கள் புரட்டி எடுத்தன.

சிங்கத்தின் பிடியில் இருந்து தப்பிக்க அந்த காவலர் எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் பலனளிக்காமல், சிங்கக் கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டது. அதில் ஒரு சிங்கம் காவலரை இழுத்து கீழே தள்ளி அவருக்கு மேல் நின்று கொண்டது.

உடனடியாக விரைந்து வந்த மீட்புக் குழுவினர், சிங்கங்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து அங்கிருந்து அகல வைத்து, சுமார் 30 நிமிட போராட்டத்துக்குப் பின்னர் காவலரை மீட்டனர்.

நகங்களின் சிராய்ப்பு, பற்களின் கடியால் பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *