வடமராட்சி கடல்பகுதியில் இனம்தெரியாத நச்சு உயிரினம் தாக்கி 3 மீனவா்கள் வைத்தியசாலையில் அனுமதி. வடமராட்சி கிழக்குஇ கற்கோவளம் கடற்பகுதியில் நச்சுநீர் (ஜெல்லி மீன் போன்ற நச்சு உயிரினம்) தாக்கியதில் மீனவர்கள் மூவர் பாதிக்கப்பட்ட நிலையில்இ பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (10) அனுமதிக்கப்பட்டனர்.
கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இந்த நச்சு உயிரினம் தாக்கியதில் ஒவ்வாமை, சோர்வு மற்றும் சுவாச பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
மழைக் காலங்களில் பலவகையான அசுத்தநீர் கடலுடன் இணைவதால் நச்சு உயிரினங்கள் உருவாகி அது மீனவர்களை பாதிப்புக்குள்ளாக்கி வருவதுடன் இதனால் பருத்தித்துறையில் கடந்த வாரமும் 5 மீனவர்கள் பாதிக்கப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்ற மாதம் வல்வெட்டித்துறை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது