கனடா- ரொறொன்ரோ பெரும்பாகத்தில் குளிர்கால காலநிலை குளறுபடியான மற்றும் வழக்கமான காலை நேர பயணத்தில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.
காலை 9.மணியளவில் பியர்சன் சர்வதேச விமான நிலைய பகுதியில் 9-சென்ரிமீற்றர்கள் வரையிலான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கனடா சுற்றுச்சூழல் பிரிவு பிரம்ரன், மிசிசாகா, வாஹன், றிச்சமன்ட் ஹில் ,நியுமாக்கெட், ஜோர்ஜியா, ஓக்வில், மில்ரன், யோர்க் பிராந்தியத்தின் வடபகுதிகள் ,பேர்லிங்டன் மற்றும் ஹால்டன் ஹில் பிரதேசங்களிற்கு பனிப்பொழிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்பகுதிகளில் இன்று 15 தொடக்கம் 20 சென்ரிமீற்றர்கள் வரையிலான பனிப்பொழிவு ஏற்படும் எனவும் தெரியப்படுத்தப் பட்டுள்ளது.
காலை 8-மணிவரையில் ரொறொன்ரோ பெரும்பாகத்தில் குறைந்தது 50-மோதல்கள் ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோர்க் பிராந்தியம், மிசிசாகா, பிரம்ரன், மற்றும் கலிடோன் பகுதிகளில் பாடசாலை பேரூந்துகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.
விமான சேவைகளும் தாமதத்திற்கு உட்பட்டிருப்பதால் பயணிகள் தங்கள் விமான பயண நிலைமையை அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
GO போக்குவரத்து, TTC போக்குவரத்து மற்றும் யோர்க் பிராந்தி போக்குவரத்து சேவைகளும் தாமதத்தை எதிர்நோக்கியுள்ளன.