பிரித்தானியாவில் இயேசு கிறிஸ்து யார் என்ற கேள்விக்கு ஐந்தில் ஒரு குழந்தை, அவர் கால்பந்தாட்ட வீரர் என்று கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் பிரபல செய்தி நிறுவனம் ஒன்று, Brent Cross Shopping Centre-ல் வருகை புரிந்த குழந்தைகளிடம் சில கேள்விகளை கேட்டது.
இயேசு கிறிஸ்து யார் என்ற கேள்வி கேட்டு அதற்கான ஓப்ஷன்களையும் வழங்கியது.
1. கால்பந்தாட்ட வீரர்
2. கடவுளின் மகன்
3. தொலைக்காட்சி தொகுப்பாளர்
4. விண்வெளி வீரர்
இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், ஐந்தில் ஒரு குழந்தை இயேசு கிறிஸ்து ஒரு கால்பந்தாட்ட வீரர் என்றே பதிலளித்துள்ளனர், இந்த ஆய்வு முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.