கடந்த 23 வருடங்களாக கண்கானாத இடத்தில் சிறை வாசத்தை அனுபவித்து வந்த சுன்னாகம் வாசி உறவினர்களினால் சொந்த இடத்திற்கு நேற்று அழைத்துவரப்பட்டுள்ளார்கள்.
கடந்த இருபத்தைந்து வருடத்திற்கு முன்னர் கொழும்பில் தொழிலுக்காகச் சென்றிருந்த வேளையில் 1991-ஆம் ஆண்டு இடம் பெற்ற குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சுன்னாகம் பெற்றோல் செற் ஒழுங்கையைச் சேர்ந்த எஸ்.வைரவநாதன் வயது 53 என்பவர் காணாமல் போயிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இவருடைய பெற்றோர்களும் காலமாகிய நிலையில் இவரைப் பற்றிய எந்த விதமான தகவல்களையும் பெறுவதில் யாரும் ஆர்வம் காட்டாத நிலமை காணப்பட்டது.
ஆனால் குறிப்பிட்ட நபர் ஹம்பாந்தோட்டையில் உள்ள புனர்வாழ்வு நிலையத்தில் இருப்பதாகக் கிடைக்கப் பெற்ற கடிதத்தைத் தொடர்ந்து உறவினர்களினால் குறிப்பிட்ட நபர் தற்போது அழைத்து வரப்பட்டுள்ளார்.
குறித்த நபர் காணாமல் போகும் போது 28 வயது இளைஞராக இருந்த நிலையில் இருபத்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் வெளியே வந்துள்ளமை உறவினர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாகியிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.