தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு நாளான இன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலை 11 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக புதிய கட்டடத்தொகுதியிலே அவரது படம் வைக்கப்பட்டு நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக விடு முறைகாரணமாக அது மூடப்பட்டிருந்தது. விரிவுரைகள் ஏதும் நடை பெற்றிருக்கவில்லை. இந்நிலையில் அங்கு பிரசன்னமாகியிருந்த மாணவ பிரதிநிதிகள் இந்த நினைவேந்தலை அனுஸ்டித்ததாக தெரியவருகின்றது.