ஆயுததாாி இருந்த விடுதிக்குள் ஆயுதம் தாங்கிய கொமாண்டோக்கள் அதிரடியாக உள்நுழைந்து நடத்திய துப்பாக்கி பிரயோகத்தை தொடா்ந்து 17 மணித்தியாலத்திற்கு பின்னா் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 7 பணயக்கைதிகள் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்படுவதாக தொிவிக்கப்படுகின்றது. இந்த அதிரடி நடவடிக்கையின்போது குண்டுச்சத்தங்களும் துப்பாக்கி வேட்டுக்களும் பலமாக கேட்டுள்ளன. இந்த மோதலில் ஆயுததாாியும் ஒரு பணயக்கைதியும் உயிாிழந்துள்ளதாக உள்ளுா் செய்திகள் தொிவிக்கின்றன.
சிட்டினியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆயுததாாி ஈரானிய அகதி ஒருவா் என்றும் அவா் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. Haron Monis என்ற நபரே (கீழே படம் உள்ளது) ஆயுதமுனையில் பணயக்கைதிகளை பிடித்து வைத்துள்ளதாக இனங்காணப்பட்டுள்ளாா்.