மார்கழிப் பிள்ளையார்
நாளை (16.12.2014) மார்கழி முதல் நாள்,எங்கள் பிள்ளையாருக்கு வழக்கம் போல் காலை சிறப்புப் பூசை,இ பிரசாதம்-நெய் மணக்கும் சர்க்கரைப் பொங்கல்
மார்கழி மாத நாட்கள் முழுவதும் மிகவும் விசேஷமானவை. நாள்தோறும் சகல சைவ ஆலயங்களிலும்,வைணவ ஆலயங்களிலும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை,ஆராதனை நடத்தப்படும். மேளதாள வாத்தியங்கள் முழங்கப்படும். சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாடப்படும்.
மக்கள் யாவரும் அதிகாலையில் துயில் எழுந்து, வீடுகளை சுத்தம் செய்து,உடல் நீராடி, வீட்டு வாசல்களில் அழகிய கோலங்கள் போடுவார்கள். கோலத்தில் மார்கழி பிள்ளையார் வைத்து புஷ்பங்கள் இட்டு,ஆலயம் சென்று இறைவனை வழிபடுவார்கள். இந்த மாதத்தில் மக்கள் அனைவரும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க பார்க்க முடியும்.
வல்வையில் மார்கழி பிள்ளையார் பிடிக்கும் வழக்கம் மருவி செல்கின்றது என்பதுதான் வருத்தம் தரும் உண்மை . மார்கழிப் பிள்ளையார் பிடிக்கும் வழக்கத்தினை மாணவ மாணவிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும் .