யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக குழுக் கூட்டத்தில் திட்டமிட்டு தாக்குதல்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் காயம் (காணொளி)

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக குழுக் கூட்டத்தில்  திட்டமிட்டு தாக்குதல்!  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் காயம் (காணொளி)

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் பரஸ்பர தாக்குதல்களையடுத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது
இன்றைய தினம் இடம்பெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தையே குழப்பும் வகையில் திட்டமிட்டு ஈபிடிபி தனது சாதாரண உறுப்பினர்களையும் இன்று கூட்ட மண்டபத்தினுள் கொண்டு வந்திருந்தது.
முன்னதாக டக்ளஸ் தனது தலைமை உரையினில் கூட்டமைப்பினை விமர்சிக்க பதிலுக்கு கூட்டமைப்பினர் அதனை நிராகரிக்க கூச்சல் குழப்பத்தால் மண்டபம் அதிர்ந்தது.இணை தலைமை தாங்கிக்கொண்டிருந்த முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சுமூக நிலையினை தோற்றுவிக்க பாடுபட்ட போதும் அது வெற்றி பெற்றிருக்கவில்லை.விவாதம் உச்சமடைந்த நிலையினில் பரஸ்பரம் நாயே பேயே துரோகி என சொற்கள் பறந்தன.தண்ணீர் போத்தல்கள் வீசப்பட்டன.இதில் வடமாகாண விவசாய அமைச்சர் ஜங்கரநேசன் காயமடைந்தார்.அவரது வாயிலிருந்து இரத்தம் வழிந்தது.யார் தாக்குகிறார்கள் என்பது தெரியாது போத்தல்கள் வீசப்பட்டது.
முதலில் வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் மீது பலரும் இணைந்து தாக்குதல் நடத்தியிருந்தனர்.
அத்துடன் அவர் கையிலிருந்த ஒலிவாங்கியினையும் அவர்கள் பறித்தெடுத்தனர். தொடர்ந்தும் விவசாய அமைச்சர் ஜங்கரநேசன், உறுப்பினர்களான சர்வேஸ்வரன், விந்தன் என பலரும் கடுமையாக தாக்கப்பட்டனர்.
கல்வி அமைச்சர் குருகுலராஜா தள்ளி வீழ்த்தப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மீதும் தாக்குதல் முயற்சி நடந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published.