கலாச்சாரம் மற்றும் கலை அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட கலாபூசணம் விருது வழங்கும் விழா 2014 (30வது ) நேற்று (14/12/2014) காலை 9.30 மணியளவில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் எமது மண்ணைச் சேர்ந்த தில்லை சிவலிங்கம் (தில்லையம்பலம் தவராசா) அவர்கள் கிராமியக் கலைக்காக கலாபூஷணம் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளார்.
இவ் விருது தொடர்பில் கலாபூஷணம் நூலில் இருந்து……. பொலிகண்டி பிரதேசத்தை சேர்ந்த இவர் ஓர் சிறந்த கிராமியக் கலைஞர் ஆவார். பாரம்பரிய கலைக் குடும்பத்தில் பிறந்தமையினால் சிறுவயது முதல் மிகுந்த கலை ஆர்வம் கொண்டிருந்தார். கிராமியக் கலைகளான சிலம்பாட்டம் உடுக்கடித்தல் சுருள் வாள் வடு தீப்பந்த விளையாட்டு மற்றும் கூத்துக் கலையிலும் சிறந்து விளங்கினார் இலக்கியத் துறை நாடகத்துறை பங்களிப்பு யாழ் மாவட்டம் பருத்தித்துறை பிரதேச ஆலயங்களின் விழாக்களிலும் கலை விழாக்களிலும் இவரது கலை நிகழ்வுகள் தவறாது இடம்பெறுகின்றன. இவர் சிலம்பாட்டக் கலையை நடராசா சோதீஸ்வரரிடம் முறையைக் கற்று மறவர் பண்பாட்டு மையத்தின் மூலம் தனது பிரதேச இளைஞர்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் கற்பித்து வருகின்றார். சுமார் 40 ஆண்டுகளாக இவர் இத்துறையில் பணியாற்றி வருவதுடன் கிராமியப் பாடல்களை இசையமைப்பதிலும் பாடுவதிலும் வல்லவராகத் திகழ்கின்றார். பெற்றுள்ள விருதுகள் இவரது கலைப் பணியை பாராட்டி சிலம்புச் சக்கரவர்த்தி கலைப்பருதி சிலம்பாசன் ஆகிய பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப் பட்டுள்ளார்.