லண்டனில் 14 வயதுடைய தமிழ் மாணவன் காற்பந்தாட்டப் பயிற்சியின் போது திடீரென உயிரிழந்தமை பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் கவலையினை உண்டாக்கியுள்ளது.
லண்டன் ஹரோவில் உள்ள வைட்மோர் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்று வந்த 14 வயது மாணவனான, சுஜிந்த் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பள்ளிக்கூடத்தில் கால்பந்தாட்ட பயிற்சி எடுக்கும்போது சுஜிந்த் நெஞ்சில் அடிபட்டுள்ளது. சிறிய வலியே முதலில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் அவரை “நோத்-விக் ” பார்க் (Northwick Park )வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் சுஜிந்த் இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவனின் மார்பு பக்கமாக அடி விழுந்ததில், உள்ளேயே இரத்தப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ரத்தம் பெருகி அவர் இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றாகப் படிக்க கூடிய மற்றும் அனைத்து விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கிய மாணவன் இவ்வாறு திடீரென உயிரிழந்தமை கவலையளிப்பதாக ஆசிரியர்களும் சக மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சக மாணவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
சுஜிந்த் ஒரு நல்ல நண்பர், இரக்க குணம் படைத்தவர், அனைவரோடும் நன்றாகப் பழகும் குணம்கொண்டவர், அவரை தாம் இழந்துவிட்டோம் என்றும் கவலை வெளியிட்டுள்ளார்கள்.