ஜனவரி எட்டாம் திகதி இலங்கையில் மிக மோசமான வன்முறைகள் இடம்பெறலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது:

ஜனவரி எட்டாம் திகதி இலங்கையில் மிக மோசமான வன்முறைகள் இடம்பெறலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது:

ஜனவரி எட்டாம் திகதி மிகமோசமான வன்முறைகள் இடம்பெறலாம் என அச்சம்கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி , அதிலிருந்து தனது உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை பாதுகாப்பதற்காக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆராயந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்கவிற்கும் ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கும் இடையில் சற்றுமுன்னர் எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனவரி 8 ம்திகதி கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கான பாதுகாப்பு தொடர்பாகவே இந்த சந்திப்பின்போது ஆராயப்பட்டுள்ளது.

இரு மேஜர்ஜெனரல் தர அதிகாரிகளும்,பிரிகேடியர் மற்றும் கேர்ணல்தர அதிகாரிகள் பலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாக தெரியவருகின்றது.

ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் உத்தரவில்பெயரில் செயற்படும் குண்டர்கள் சிலரால் எதிர்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தாக்கப்படுவது அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று மிகமோசமான வன்முறைகள் இடம்பெறலாம்,என எதிர்கட்சிஅ ச்சமடைந்துள்ளது.இதன் காரணமாக தனது உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு முழமையான ஆதரவை வழங்கவேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளது என கட்சிவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published.