அரையிறுதியாட்டத்தில் வல்வை விளையாட்டுகழகத்தை எதிர்த்து கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டு கழகம் மோதியது இவ்விரு விளையாட்டு கழகங்களும் தலா ஒரு கோலினை போட்டு சமனிலையினால் நடுவரின் தீர்மானப்படி தண்ட உதை வழகப்பட்டது தண்ட உதையில் வல்வை விளையாட்டுகழகம் வெற்றி பெற்று இறுதிஆட்டத்திற்கு தகுதி பெற்றது. இவ்இறுதி ஆட்டத்தில் வல்வை விளையாட்டுகழகத்தை எதிர்த்து கலைமதி விளையாட்டுகழகம் மோதவுள்ளது இவ்இறுதி ஆட்டம் 24.12.2014 மாலை 3.00 மணிக்கு நடைபெறும் . வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான உதைபந்து சுற்றுப்போட்டி ரேஞ்சர்ஸ் விளையாட்டு கழகம் மைதானத்தில் நடைபெற்றது இச்சுற்றுப்போட்டியில் 17 கழகங்கள் பங்குபற்றுகின்றது