பொலிஸ் நிலையத்தை தாக்கிய மர்ம நபர் சுட்டுக்கொலை (வீடியோ இணைப்பு)

பொலிஸ் நிலையத்தை தாக்கிய மர்ம நபர் சுட்டுக்கொலை (வீடியோ இணைப்பு)

பிரான்சில் பொலிஸ் நிலையம் ஒன்றில் புகுந்து, பொலிஸ் அதிகாரிகளை கத்தியால் குத்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிரான்சின் ஜோ லெஸ் டூர்ஸ் (Joue les Tours) பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் நேற்று முன் தினம் மர்ம நபர் ஒருவர் கத்தியுடன் சென்றுள்ளார்.

இதன்பின் பொலிஸ் அதிகாரிகளை நோக்கி பாய்ந்த அவன், கண் இமைக்கும் நேரத்தில் 3 பேரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளான்.

இதில் அதிர்ச்சி அடைந்த பொலிசார் ஒருவர், உடனே அந்த மர்மநபரை துப்பாக்கியால் சுட்டதில் அந்நபர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் பெர்னார்டு கசாநியூவ் (Bernard Cazeneuve)சம்பவம் குறித்து விசாரணை நடத்தியுள்ளார்.

விசாரணையில் டின்ஜான் (Dijon) நகரில் காரை ஓட்டி சென்ற இந்த மர்ம நபர், சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதியதில் 11 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அதில் இருவரின் நிலை மோசமாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து பாதசாரிகள் மீது காரை மோத செய்தபோது ‘அல்லாஹூ அக்பர்’ (Allah uh Akbar) என இவர் கத்தினார் என்றும் இவரை பொலிசார் பிடிக்க முயன்றபோது தப்பித்து ஓடிவந்து பொலிஸ் நிலையத்தை தாக்கியுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

தற்போது இவரால் தாக்கப்பட்ட 3 பொலிசார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.