அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மலைப் பகுதியில் தனி நபராக நபர் ஒருவர், கடந்த 25 ஆண்டுகளாக மலைகளை குடைந்து குகைகளை வடிவமைத்துக் கொண்டிருக்கிறார்.
Ra Paulette என்ற 74 வயது நபர், யாருடைய உதவியும் இல்லாமல் சுயமாகவே குகைகளை வடிவமைக்கும் கட்டிட கலையினை கற்றுக்கொண்டு செயலபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குகைகள் இருப்பது பலருக்கும் இத்தனை வருடங்களாக தெரியாத நிலையிலேயே இருந்துள்ளது.
ஏனெனில் வெளியில் இருந்து இந்த மலைப் பகுதிகளை பார்க்கும் எவருக்கும் அதன் உள்ளே இவரால் வடிவமைக்கப்பட்டிருக்கும் அழகிய மற்றும் அதிசய குகைகள் கண்களில் புலப்படாது.
தன்னுடைய செல்ல நாயுடன் இந்த குகை வடிவமைக்கும் பணியினை செய்து வரும் இவர், இந்த பணிக்காக சாதாரண கருவிகளான கோடாரிகள், கரண்டிகள் போன்றவற்றை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்த குகையின் உள்ளே சென்று பார்த்தால், சுவர்களில் பலவிதமான வடிவமைப்புகளில், அழகான விதமாக செதுக்கியுள்ளார்.
கோடாரி மூலம் குகைகளை தோண்டும் இவர் பின்னர் அந்த மண்ணை தானே ஒரு சிறிய வண்டி மூலம் அள்ளி கொண்டு வெளியே சென்று வேறு இடத்தில் கொட்டிவிடுகிறார்.
மேலும் மற்றவர்களுக்காக இந்த பணியை செய்யும்போது இவர் ஒரு மணி நேரத்திற்கு 12 அமெரிக்க டொலர் மட்டுமே பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இவர் சுமார் 12 பிரம்மாண்ட குகைகளை வடிவமைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், இந்த 12 குகைகளில் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான முறையில் கட்டிட நிபுணர்களே அதிசயக்கும் வகையில் அமைந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.