வடக்கில் அமெரிக்கா கருத்துக் கணிப்புக்களை நடத்தி வருவதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்ந வன்னிப் பெருநிலப்பரப்பில் அமெரிக்கத் தூதரகம் கருத்துக் கணிப்புக்களை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரி சன்டீப் க்ரோஸ் என்பவர் வன்னிக்குச் சென்று கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றியீட்டுவார் என்பது குறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புக்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
மோசமான காலநிலையையும் கருத்திற் கொள்ளாது தூதரக அதிகாரிகள் இவ்வாறு வடக்கிற்கு சென்று சந்திப்புக்களை நடத்தி கருத்தக் கணிப்பு நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.