மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது உக்ரைன் விமானப்படை விமானி தான் என ரஷ்யா புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த யூலை மாதம் 17ம் திகதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போயிங் 777 விமானம், ரஷ்ய கிளர்ச்சியாளர்களால் சுடப்பட்டதால், விமானத்தில் பயணித்த 293 பேரும் பலியாகியுள்ளனர்.
ஆனால் இதை மறுத்த ரஷ்ய விசாரணை குழு ஒன்று தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், உக்ரைனின் நிப்ரோபெட்ரோவ்ஸ்க் நகர விமான தளத்திலிருந்து, சம்பவம் நடந்த யூலை 17ம் திகதி போர் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.
விண்ணிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளுடன் புறப்பட்டு சென்ற அந்த விமானம், அந்த ஏவுகணைகள் இல்லாமல் விமான தளத்துக்குத் திரும்ப வந்துள்ளது.
இதை அந்த விமான தளத்தில் பணியாற்றிய ஒருவர் நேரில் பார்த்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இச்சம்பவத்தை நேரில் பார்த்து சாட்சியமளித்த அந்த நபர் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை என கூறப்படுகிறது.