சுனாமி பேரலை அனர்த்தத்தின் 10ம் ஆண்டு நினைவு இன்று. ஆழிப்பேரலை காவுகொண்ட அனைத்து உறவுகளையும் நாம் என்றும் மறவோம்.
இக்கொடூர பேரலையில் உயிர் நீத்த எமது அனைத்து உறவுகளையும் நினைவு கூருவதுடன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக .
கடலை நம்பி வாழ்ந்த மக்களை கடலே கொன்றொழித்த சுனாமிப் பேரலை 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் நாள் இந்தோனேசியாவின் சுமாத்திராதீவில் பெரும் குமுறலாக எழுந்து இந்தோனேசியா தமிழீழம், சிறிலங்கா, தமிழ்நாடு உட்பட்ட சில நாடுகளை தாக்கி மிக நீண்ட கடற்கரையோர நிலங்களை அழிவுசெய்து சில மணிநேரத்திலேயே அடங்கிப்போனது. தமிழீழத்தில் முல்லைத்தீவு அம்பாறை மட்டக்களப்பு யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் கரையோரப்பிரதேசங்கள் சுனாமிப்பேரலையால் தாக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கடலால் அள்ளுண்டு போயினர்.இதில் முல்லைத்தீவில் அதிகளவிலான மக்கள் கொல்லப்பட்டனர். தமிழீழத்தில் பலிகொள்ளப்பட்ட மக்களின் தொகை இருபதாயிரம் ஆகும்.உலகம் முழுவதும் சுமார் 2,80,000 பேர் உயிரிழந்தனர்.