பிரித்தானிய ராணி எலிசபெத்தின் பாதுகாவலர்களை தாக்குவதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சதி செய்துள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணியின் பாதுகாவலர்களில் ஒருவரை கடத்தி கொல்வதற்கு அவர்கள் சதி செய்துள்ளதாக பிரபல நாளிதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாளிதழில் கூறியிருப்பதாவது, உளவுத்துறையினர், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் இணையதள உரையாடல்களை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளனர்.
ராணி குடும்பத்தினரை தாக்குவது கடினம் என்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அறிந்துள்ளனர்.
எனவே அவர்கள் ராணியின் பாதுகாவலர்களில் ஒருவரை அவர்கள் தாக்குதல் இலக்காக கொள்ளக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் செயின்ட் ஜேம்ஸ்(Saint james)அரண்மனை, கிளாரன்ஸ்(Clerants) இல்லம் ஆகியவற்றில் ராணியின் பாதுகாவலர்கள் எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டுள்ளனர்.